வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென் வடிவமும் வண்ணமும் உயிரும் தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத் தேகமும் உருவும்மெய்ச் சிவமும் ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான் நம்பினேன் கைவிடேல் எனையே