வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம் ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப் பாடுகநீ என்றான் பரன்