வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம் ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை முடரை நெஞ்சக் கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே