வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன் பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே