வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புதுமணப் பூவே பாதமே சரணம் சரணம்என் தன்னைப் பாதுகாத் தளிப்பதுன் பரமே திருச்சிற்றம்பலம் காட்சிப் பெருமிதம் திருவலிதாயம் கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம்