வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச் சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம் போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும் சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே