வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும் வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால் ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும் சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில் புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே