வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில் பேதை எனவீழ்ந்தே பிணிஉழத்தே பேயடியேன் ஓதை கடற்கரைவாய் ஒற்றிஅப்பா வாழ்த்துகின்றோர் தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ