வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில் தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும் தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ