வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர் தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே யீனா தவணீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ