வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே