வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின் வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில் தானேயும் புவியேஅப் புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்று கின்ற ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத் துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின் தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே