வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில் நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன் தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே