வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும் தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல் கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே