வான்காணா மறைகாணா மலரோன் காணான் மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான் நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும் அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே