வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக் கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல் தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப் பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே