வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத் தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத் தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங் குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக் காட்டினையே என்னேநின் கருணை ஈதோ