வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் மாபெருங் கருணைஎம் பதியே ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா உலகமும் நிறைந்தபே ரொளியே மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் வயங்கும்ஓர் வெளிநடு மணியே பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே