வாயாகி வாயிறந்த மவுன மாகி மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக் காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக் கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித் தானாகி நானாகிச் சகல மாகி ஓயாத சத்தியெலாம் உடைய தாகி ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே