வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல் வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம் தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன் துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய் கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக் கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே