வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும் வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத் தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன் என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே தூய்க்குமர குருவேதென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே