வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து மலத்திலே கிடந்துழைத் திட்ட நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும் நன்றுறச் சூட்டினை அந்தோ தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில் சோதியே நின்பெருந் தயவைத் தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின் தயவும்உன் தனிப்பெருந் தயவே