வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும் தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான் துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண் மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும் ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே