வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன் மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும் தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர் ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர் ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே