வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம் பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச் சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத் தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே