வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித் தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும் சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச் சேய்மைவிடா தணிமையிடத் தாள வந்த செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள் ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே