வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார் தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச் செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன் ஆரமுதே முக்கனுடை அரசே வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ