வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே
வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார் நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத் தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ