வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவ மேஅலால் பலன்சிறி துளதோ ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே