வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர் தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின் தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே