வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு மாலைவந் தணிந்தனன் என்றாள் ஊழிதோ றூழி உலவினும் அழியா உடம்பெனக் களித்தனன் என்றாள் ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும் அளிக்கஎன் றருளினான் என்றாள் ஏழியன் மாட மிசையுற வைத்தான் என்றனள் எனதுமெல் லியலே