வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர் ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே
வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச் சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல் வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ