வாழும்இவ் வூலக வாழ்க்கையை மிகவூம் வலித்திடும் மங்கையர் தம்பால் தாமும்என் கொடிய மனத்தினை மீட்டுன் தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே தோற்றம்ஈ றற்றசிற் சுகமே ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல உதவூசீர் அருட்பெருங் குன்றே திருச்சிற்றம்பலம் அன்பிற் பேதுறல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்