வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும்ஓர் வெற்றருள் வாழேன் தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண்எனத் தாழேன் சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே