வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள் ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில் அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே சஞ்சரித் துழன்றுவெங் நரகில் வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை வெள்பினுள் ஒளிர்அருள் விளக்கே திருச்சிற்றம்பலம் கையடை முட்டற் கிரங்கல் கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்