வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன் தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருள்ஆளா கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே வேழ்வி ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே கேழ்வி வேழ்வி என்பன எதுகை நோக்கித் திரித்தவாறு தொவே