வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான வாரிதியே தணிமைமலை வள்ள லேயான் பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப் பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும் தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள் ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்