விச்சை வேண்டினை வினையுடை மனனே மேலை நாள்பட்ட வேதனை அறியாய் துச்சை நீபடும் துயர்உனக் கல்லால் சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ பிச்சை எம்பெரு மான்என நினையேல் பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால் இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும் இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே