விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர் மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார் நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி முட நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம் அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ