விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத் தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே