விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென் உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற் கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே