விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர் ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம் திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே