விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை அடுத்தேன் ஒற்றி அப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன் படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ