விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க இடையின்அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன் உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில் உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே