Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1561
விடையார் கொடிமே லுயர்த்தருளும் 

வேத கீதப் பெருமானார் 
உடையா ரொற்றி யூரமர்ந்தா 

ருவந்தென் மனையி லின்றடைந்தார் 
இடையா வைய மென்றார்நா 

னிடைதா னைய மென்றேனாற் 
கடையா ரளியா ரென்றார்கட் 

கடையா ரளியா ரென்றேனே
பாடல் எண் :1686
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால் 
அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம் 
உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ 
இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.