விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப் படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட் கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய் புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே