விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ் சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப் படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால் நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே