விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன் சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொல்லுமென்றேன் பட்டுண் மருங்கே நீகுழந்தைப் பருவ மதனின் முடித்ததென்றார் அட்டுண் டறியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே