விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக் கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்அ றாத்துயர்க் கடலுள் முழ்கியே இயங்கி மாழ்குவேன் குலவும் போரி வாழ் சாமி யேதிருத் தணிகை நாதனே போரி-திருப்போருர்