விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக் கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்